Wednesday, November 19, 2014

என் ஆசிரியர் நிர்மல் செல்வமணி அய்யா



 ஆசிரியர் நிர்மல் செல்வமணி அய்யா


  • தமிழின் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆங்கிலத்தில் eco literature என்கிற இலக்கிய விமர்சன வகைப்பாட்டின் முன்னோடி. 
  • தொல்காப்பிய ஆய்வாளர். 
  • ஆங்கிலத் துறையின் தமிழ்ப் போராளி. 
  • தமிழ் இசையியல்த் துறையில் வல்லுநர். 
  • இசை ஆய்வாளர் அய்யா வி ப க சுந்தரத்தின் மாணவர்.
  • இசையந்தன்  = இசை அழகன் (அ) இசையில் முழுமையானவன்.
  • தொல்காப்பியத்தில் அந்து என்பது அழகு
  • அந்தத்தில் இருந்து தான் சகர மெய் சந்தம் வந்தது
  • திணை என்கிற ஒரு இதழ் கொண்டு வந்தார்
  • மற்றவை எல்லாம் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள். 
  • சில அமெரிக்க சீன மற்றும் ஆசியப் பல்கலைக் கழகங்களில் சிறப்பு அழைப்பாளர். 
  • முனைவர் பட்டம் "தொல்காப்பியத்தின் அழகியல் கோட்பாடு"
  • இலங்கை ஆய்வாளர் reverend ஞானப்பிரகாசம் கண்ட தமிழ் வேர்ச் சொல் அகராதி தான் முதல் தனி வேர்ச் சொல் அகராதி

-முகநூலில் இளங்கோ கல்லானை 



Monday, November 17, 2014

நல்லவன் அல்லது தனித்திறனாளி - எப்படி இருக்க வேண்டும் உங்கள் குழந்தை




நல்லவன் அல்லது தனித்திறனாளி


  • யாருக்கும் பணியாமல் இறுமாப்போடு இரு என்று குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பதல்ல நோக்கம்.... உன் தேவையாய் இருந்தாலும் கெஞ்சிப்பழகாதே என்று சொல்லிக்கொடுப்பதுதான் நோக்கம்...!!! 
  • தகப்பனே ஆனாலும் இரு கை எடுத்து இறைஞ்சக் கூடாது. இந்த குற்ற உணர்ச்சியையும் குறுகலையும் ஒரு போதும் கொள்ளாதே
  • அவன் மேலும் மேலும் கீழ்ப்படிகிறானே நல்லவனாக இருக்க வேண்டும் என்று தன்னை இழக்கிறானே
  • இரு கைகளையும் பரப்பி படுத்தபடி வானத்தைப் பார்க்கும் குழந்தையைக் காணோமே
  • பள்ளிக்குக் கொடுக்கும் போது பலி கொடுக்கிறோமே என்று அயர்ச்சியாக இருக்கிறது. சமூக ஒப்பந்தங்கள் அப்படி என்று சோர்கிறேன்
  • குழந்தைகள் சுயமாகத் தேடுவதையே விரும்புகிறார்கள்.
  • பழங்குடிகள் இஷ்டமான குழந்தைகளாகவே வளர்ந்து ஓவியம் மண்பானைகள் சட்டிகள் என்று செய்து வாழ்ந்திருப்பார்கள். கீறல்களை பூச்சுகளை குடைதல்களை குழந்தைகளின் கைவண்ணத்தொடு கற்பனை சிதையாமல் செய்திருப்பார்கள். 



- இளங்கோ கல்லானை முகநூலில் 


Sunday, November 16, 2014

நட நடவு நடனம் நாடகம் நர்த்தனம் - தமிழ்


என்னுடைய இன்றைய காலைப் பொழுது வயலில் துவங்கியது. நீரை வயலில் இருந்து வெளியேற்ற வேண்டி இருந்தது. நிறைய வெளிநாட்டுப் பறவைகள் கண்மாய்களில் முகாமிட்டுள்ளன. இவ்வளவு பெரிய பறவைகளை நான் எங்கள் ஊரில் பார்த்ததில்லை. மண்வெட்டி மூக்கன்கள் பெரிய கொக்குகள் பிலேமிங்கோக்கள் வந்துள்ளன. சிறுவனாக இருந்த பொது என் அப்பாவுடன் நடந்து இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வயலுக்குப் போவோம். ஒரு மழை நாளில் வரப்பில் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று நரிகள் வரப்பில் விழுந்து ஓடின. நரிகள் எப்படி வரப்பு பொந்துகளில் உள்ள நண்டுகளுக்கு வலை விரிக்கும் என்று அப்பா சொல்லிக் கொண்டு வந்தார். நண்டு துளைக்குள் வாலை உள்ளே விட்டு கவ்விக் கொள்ளச் செய்யுமாம் நரி. அதை வெளியே மெதுவாக எடுத்துப் போட்டு உண்ணுவது தான் வேலை. வரப்பெங்கும் நண்டுகளின் ஓடுகள் சுடுகாடு போல கிடக்கும். நான் கேட்டுக் கொண்டே உடன் நடப்பேன். இப்போது பறவைகள் நிறைய தவளைகள் பூச்சிகளை தின்று கொண்டிருந்தன. முன்பு போல நண்டுகள் இல்லை. பூச்சி மருந்துகள் தான் காரணம். ஆனால் இப்போது கொஞ்சம் பரவாயில்லை.
இன்று நடவு செய்யும் பெண்களின் பாட்டும் காற்றும் மிதமாக இருந்தது. நடவு நடனம் நட நாடகம் நடு என்று சொற்களை போட்டு விளையாடிப் பார்த்தது மனது. உலகின் மூச்சு நாயகனான நடராசன் யோகத்தில் நின்றிருக்கும் நடனக் கோலம் என்று வயலை கண்டேன். இங்கே மூச்சு ஆடிக் கொண்டிருக்கிறது. அசைவும் மூச்சும் என்று மனம் சொல்லிக் கொண்டது. நடனம் நாட்டியம் நடவு நடு நாடகம் தமிழ் தான். கொண்டாட்டமான அசைவு தமிழ் தான். மரணத்தைக் கூட கொட்டடித்துக் கொண்டாடும் கூத்துக்குச் சொந்தக்காரர்கள் தமிழர் தானே. அவர்களின் மூர்த்தி தானே நடனக் கலைஞனாக இருக்க முடியும். சிந்துவில் இருந்து நட நடவு நடனம் நாடகம் நர்த்தனம்.,தமிழ் தான்..

- இளங்கோ கல்லானை முகநூலில்.

Source: