Friday, December 5, 2014

பிரபாகரனுக்கு வீர வணக்கங்கள் - நவம்பர் 26 - அகவை 60

"தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அரசியல்க் கோழைகள் " என்று வட இந்தியாவின் பொதுப் புத்திக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அரசியலில் தொடர்ந்து போராடிய இனம் நமது. விடுதலைப் போராட்டத்தில் ஐ என் எ வில் தமிழர்களே மிகுதியாக இருந்தனர். வேலூரை பற்றி தெரியாமல் மங்கள் பாண்டே என்பார்கள். இருட்டடிப்பில் நாம் காணாமல் போனோம் என்றார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுமே இல்லையென்றார்கள். நாம் எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. தேசியக் கட்சிகள் தங்களுக்குள்ளே வேட்டியை மட்டும் கிழித்துக் கொள்ளலாம் என்று தமிழர்கள் சனநாயக உரிமை கொடுத்தனர்.
என்னிடம் முரட்டுத் தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்ட ஆசிரியர் ஒருவர் "தமிழர்கள் அறிவாளிகள், ஆனால் பயந்தாங் கோழிகள்" என்றார். "புலிகள் தலைவனைப் பற்றி தெரியுமா? நான் புலியாக இருந்தால் என்ன செய்வீர்கள்"? என்று கேட்டேன். வெடவெடத்துப் போனார். ஒரு இனத்தின் விடுதலைக்காக அரசியல் உணர்ச்சியோடு முக நூலில் போட்டோஷாப் பண்ணியவர்கள் அல்ல நாங்கள். இனத்தின் லட்சியத்திற்கு உயிர் கொடுக்கவும் துணிந்தவர்கள். அரசியல்க் கோழைகள் தான் காந்தியைத் தவறான இடங்களில் உதாரணம் காட்டுவார்கள். எம்மினத்திற்கு மானம் ஊட்ட தொடர்ந்து பிரபாகரன்களும் பெரியார்களும் பிறப்பார்கள். நாங்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களும் அல்ல கோழைகளும் அல்ல. பிறந்து கொண்டே இருக்கும் பிரபாகரன்களுக்கு வாழ்த்துகள்.


திராவிடச் சமூகமே இந்தியாவின் முகம் - கதம்பம்

நான் எழுதுவன ஆய்வுகள் என்று சொல்வதில்லை. ஆய்வுகளை கொஞ்சம் அவ்வப்போது என்ன ஏதென்று எட்டிப் பார்த்துக் கொள்வது தான். வட இந்தியாவில் இருந்து வந்த என் மனைவிக்கு நகைகள் மேல் ஆசையில்லை. அப்படி சொல்ல முடியுமா.? இல்லை வட இந்தியாவில் நகைகள் ஆபரணங்கள் பிரியத்துக்குரியவை அல்ல. அங்கே கலாச்சாரத்தில் ஆபரணங்கள் ஒரு விசயமே அல்ல. பாண்டியன் முத்துக்கள் கொண்டு வணிகம் செய்தான் . கண்ணகி சிலம்பில் எத்தனை ஆபரணங்கள். கன்னியாகுமாரி கோவில் தூண்களில் உள்ள சிலைகளில் எத்தனை ஆபரணங்கள். என்ன கூந்தல் அலங்காரம். தமிழ் சமூகத்தின் தென்னிந்திய சமூகத்தின் ஆபரண அழகுணர்ச்சியை கட்டிடக் கலையிலும் நான் கண்டு வியப்பதுண்டு. இன்னும் பூசாத வீடுகளே வட இந்தியாவில் அதிகம். நம்முடைய கட்டிடங்களும் பெரியவை. குஜராத்தி வீடு கட்டாமல் சிறப்பாக வணிகம் செய்வார்கள் என்பார்கள். நம் நகரத்தார் வணிகம் செய்ததும் வெற்றி பெற்றதும் சுத்துக் கட்டு வீடுகள் கட்டினர். மலையாளிகள் இன்றும் வீடுகளை பெரிதாக செய்து கொண்டிருக்கிறார்கள். இது சிக்கனமற்றது என்று நினைக்கிறேன். இருந்தாலும் திராவிடர்கள் கட்டிடங்களையும் ஆபரணங்களையும் ஒரு அரசனைப் போல அனுபவிக்கும் பாங்கு அழகு. ஆந்திரத்தில் நில உடமையாளர்களும் பெரும் வீடுகள் கட்டி உள்ளனர். நாம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பெருங் காரியம் செய்யத் துடிக்கும் சமூகமாகவே இருந்துள்ளோம். நம் கோவில்களுக்கு இணையாக ஐரோப்பாவின் கத்தீற்றல்கள் தான் உள்ளன. திராவிடச் சமூகமே இந்தியாவின் முகம். தமிழகத்தில் ஒப்பீட்டளவில் வளங்கள் பகிர்ந்தே இருக்கின்றன. நாம் அமைத்த அரசுகள் சோசலிசத்துக்கு நெருக்கமானவை. சமாதான விரும்பிகளாகவும் வாழ்ந்துவிட்டோம். ஒரு அம்பானியையும் அதானியையும் வாழ வைக்கும் அரசுகளை நாம் ஏற்பதில்லை. மாறன்கள் பி ஆர் பி கள் தோற்பது நமக்கு கவலையில்லை. ஒரு தினுசானவர்கள் நாம் . இது என்ன மாதிரியான பதிவு. impressions. அவ்ளோ தான்.

முத்தம் கொடுக்கும் போராட்டம் VS காறித்துப்பும் போராட்டம்

தமிழன் எல்லாப் பிரச்சனைக்கும் வள்ளுவரையே துணைக்கு கூப்பிட முடியாது. அப்பப்போ வடிவேலுவைக் கூப்பிட்டுத் தான் சிரிச்சு ஆத்திக்கணும்.முத்தப் போராட்டம்னா என்னா?
"பேசிக்கிட்டே எல்லாச் சோலியும் முடிச்சுபுட்டியேடா"
"என்னா பேச்சு பேசுற. சொல்லிக் காட்றேண்டா என் வென்று. கடையே இருக்காது கடையே க்ளோஸ் பண்ணிருவேன் " என்று வாசித்துப் பாருங்கள்.
ஆத்திரமே வராது. சிரிப்பு தான் வரும்.

ராஜராஜசோழன் எந்த சாதி?

ராஜ ராஜ சோழன் எந்த சாதின்னு தமிழர்கள் தேடிக்கிட்டு இருக்கப்போ வச்சாங்க பாருங்க ஒரு வேட்டு இந்த ஆர் எஸ் எஸ் காரர்கள். அவர் இந்து மதம்னு. ராஜ ராஜ சோழன் எந்த சாதியாக இருந்தால் என்ன ? அவர் தமிழ் அடையாளமாக வளர்க்கப்படவில்லை. வள்ளுவனும் இளங்கோவும் வள்ளலாரும் தமிழ் அடையாளங்களாக இருந்தது மதமற்ற ஒரு அறிவுசார் தன்மையை நம் கலாச்சாரத்துக்குக் கொடுத்தது. நாம் தனி மனிதர்களை அவர்கள் வெற்றிகளை அப்படிக் கொண்டாடத் தேவையில்லை என்பது காரணமாக இருக்கலாம். தவிர ராஜராஜன் எதோ ஒரு விதத்தில் தன்னை தமிழ் அடையாளத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டான் என்பது அவன் கைவிடப்பட்டதில் இருந்தும் புரிகிறது.சமஸ்க்கிருத வழிபாட்டு முறை மற்றும் தன்னை தமிழ் மக்களிடம் இருந்து வேறுபடுத்தக் கூடிய செயல்களைச் செய்தான் என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. வெறும் சாதிய முறையில் தான் ராஜராஜனை முன்னெடுக்க நினைக்கிறார்கள். இது தோல்வியில் முடிவதே நல்லது.
மற்றவர்கள் வேண்டுமென்றே தமிழனை சூத்திரன் என்று சொல்வதோ" நான் சொல்லலை அந்தா நம்ம எதிரி நம்மை சூத்திரன்" என்று சொல்கிறான் என்றோ குறிப்பிடும் போது ராஜ ராஜனை ஒரு அரசியல் குறியீடாக தமிழர்கள் சொல்ல விரும்புகிறார்கள். ஆம் சூத்திரன் என்று தன்னம்பிக்கை இழந்து கிடப்பதை விட இது மேலானது தான். ஆனால் இதில் ஒரு ஆபத்து இருக்கிறது. சிவாஜியை மராத்தாக்கள் ஒரு மராட்டிய ஆளுமையாகக் கொண்டதை அப்படியே இந்து வீரன் முசுலீம்களுக்கு எதிராக போரிட்டவன் என்று திரித்தனர் இந்துத்துவ சக்திகள். சிவாஜி படையில் இஸ்லாமியத் தளபதிகள் கூட இருந்தனர் என்பது தான் உண்மை. இந்து ராஜராஜன் என்றால் அடுத்து எதிரி யார். தருண் விஜய்க்கு தமிழ் பிடிப்பது பிடிக்காதது அவருடைய சொந்த விஷயம். இவங்களும் மொழி அரசியல் பண்றாங்களாம். தம்பி வீட்ல பெரியவங்க இருந்தா வரச் சொல்லு என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தான். அதீத நம்பிக்கை மூட நம்பிக்கை கொண்டு இவர்கள் வருவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் மொழி

கார்ப்பரேட்டுகளின் மொழி ஒரு வகையானது. மொழியை சுத்திகரிக்கிறேன் பேர்வழி என்று மொழியின் அழகுணர்ச்சியை இல்லாமல் செய்வார்கள். தொடர்புச் சாதனமாக மட்டுமே மொழி இருக்க வேண்டும், மற்றபடி மொழிக்கு வேறு அர்த்தங்கள் இருக்கக் கூடாது. பேதங்கள் அல்லது ambiguity என்பது இல்லாமல் மொழியை தினமும் தூற்றிக் கொண்டே இருப்பார்கள். அதன் முக்கியமான நோக்கம் எல்லாரும் ஒரு பக்கத்தில் இருப்பதுவாம் அதாங்க let's be on the same page. இதற்கு அடுத்தார்ப் போல நீங்கள் இந்த பேதங்களை நீக்குவதற்கு பாடு படும் ஆளாக இருப்பது அவசியம். அதைத் தான் நம் முதலாளிகள் விரும்புவர். மொழியை பொருளை எல்லோரும் ஒரே விதமாக செம்மறியாடு மாதிரி புரிந்து கொள்ள வேண்டும். one point contact சர்வாதிகாரிக்கு இது ரொம்ப முக்கியம். இந்திய நிறுவனங்களில் standardization என்பதற்கு உழைப்பதே கம்பெனிக்கு நீங்கள் கொடுக்கும் பங்களிப்பு. தொழில் நுட்பங்களை ஆங்கில மொழியில் கொண்டு செல்வதன் மூலம் ஆங்கில மொழிக்கும் அந்த நாட்டிற்கும் இன்றும் வருமானம் தான். இந்த one point contact தான் அரசியலில் மக்களை இல்லாமல் செய்வது. மோதி போன்ற தலைமைகளை கார்ப்பரேட் அடிமைகள் விரும்பக் காரணம் அவர்களின் வேலைப் பழக்கமே. சிந்திக்கும் திறன் இழந்தவர்களுக்கு உகந்த தலைவனாக மோதியும் சர்வாதிகாரமும் மழுங்கடிக்கப்பட்ட மொழியும் அவசியம். ஒற்றை மதமும் உருப்படாத அடிமைகளும் உருவாக்கும் கார்ப்பரேட்டுக்கள் வழிபடும் நாயகன் ஒரு முதலாளி அல்லது பிரதமர்.