Friday, December 5, 2014

திராவிடச் சமூகமே இந்தியாவின் முகம் - கதம்பம்

நான் எழுதுவன ஆய்வுகள் என்று சொல்வதில்லை. ஆய்வுகளை கொஞ்சம் அவ்வப்போது என்ன ஏதென்று எட்டிப் பார்த்துக் கொள்வது தான். வட இந்தியாவில் இருந்து வந்த என் மனைவிக்கு நகைகள் மேல் ஆசையில்லை. அப்படி சொல்ல முடியுமா.? இல்லை வட இந்தியாவில் நகைகள் ஆபரணங்கள் பிரியத்துக்குரியவை அல்ல. அங்கே கலாச்சாரத்தில் ஆபரணங்கள் ஒரு விசயமே அல்ல. பாண்டியன் முத்துக்கள் கொண்டு வணிகம் செய்தான் . கண்ணகி சிலம்பில் எத்தனை ஆபரணங்கள். கன்னியாகுமாரி கோவில் தூண்களில் உள்ள சிலைகளில் எத்தனை ஆபரணங்கள். என்ன கூந்தல் அலங்காரம். தமிழ் சமூகத்தின் தென்னிந்திய சமூகத்தின் ஆபரண அழகுணர்ச்சியை கட்டிடக் கலையிலும் நான் கண்டு வியப்பதுண்டு. இன்னும் பூசாத வீடுகளே வட இந்தியாவில் அதிகம். நம்முடைய கட்டிடங்களும் பெரியவை. குஜராத்தி வீடு கட்டாமல் சிறப்பாக வணிகம் செய்வார்கள் என்பார்கள். நம் நகரத்தார் வணிகம் செய்ததும் வெற்றி பெற்றதும் சுத்துக் கட்டு வீடுகள் கட்டினர். மலையாளிகள் இன்றும் வீடுகளை பெரிதாக செய்து கொண்டிருக்கிறார்கள். இது சிக்கனமற்றது என்று நினைக்கிறேன். இருந்தாலும் திராவிடர்கள் கட்டிடங்களையும் ஆபரணங்களையும் ஒரு அரசனைப் போல அனுபவிக்கும் பாங்கு அழகு. ஆந்திரத்தில் நில உடமையாளர்களும் பெரும் வீடுகள் கட்டி உள்ளனர். நாம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பெருங் காரியம் செய்யத் துடிக்கும் சமூகமாகவே இருந்துள்ளோம். நம் கோவில்களுக்கு இணையாக ஐரோப்பாவின் கத்தீற்றல்கள் தான் உள்ளன. திராவிடச் சமூகமே இந்தியாவின் முகம். தமிழகத்தில் ஒப்பீட்டளவில் வளங்கள் பகிர்ந்தே இருக்கின்றன. நாம் அமைத்த அரசுகள் சோசலிசத்துக்கு நெருக்கமானவை. சமாதான விரும்பிகளாகவும் வாழ்ந்துவிட்டோம். ஒரு அம்பானியையும் அதானியையும் வாழ வைக்கும் அரசுகளை நாம் ஏற்பதில்லை. மாறன்கள் பி ஆர் பி கள் தோற்பது நமக்கு கவலையில்லை. ஒரு தினுசானவர்கள் நாம் . இது என்ன மாதிரியான பதிவு. impressions. அவ்ளோ தான்.

No comments:

Post a Comment