Friday, December 5, 2014

ராஜராஜசோழன் எந்த சாதி?

ராஜ ராஜ சோழன் எந்த சாதின்னு தமிழர்கள் தேடிக்கிட்டு இருக்கப்போ வச்சாங்க பாருங்க ஒரு வேட்டு இந்த ஆர் எஸ் எஸ் காரர்கள். அவர் இந்து மதம்னு. ராஜ ராஜ சோழன் எந்த சாதியாக இருந்தால் என்ன ? அவர் தமிழ் அடையாளமாக வளர்க்கப்படவில்லை. வள்ளுவனும் இளங்கோவும் வள்ளலாரும் தமிழ் அடையாளங்களாக இருந்தது மதமற்ற ஒரு அறிவுசார் தன்மையை நம் கலாச்சாரத்துக்குக் கொடுத்தது. நாம் தனி மனிதர்களை அவர்கள் வெற்றிகளை அப்படிக் கொண்டாடத் தேவையில்லை என்பது காரணமாக இருக்கலாம். தவிர ராஜராஜன் எதோ ஒரு விதத்தில் தன்னை தமிழ் அடையாளத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டான் என்பது அவன் கைவிடப்பட்டதில் இருந்தும் புரிகிறது.சமஸ்க்கிருத வழிபாட்டு முறை மற்றும் தன்னை தமிழ் மக்களிடம் இருந்து வேறுபடுத்தக் கூடிய செயல்களைச் செய்தான் என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. வெறும் சாதிய முறையில் தான் ராஜராஜனை முன்னெடுக்க நினைக்கிறார்கள். இது தோல்வியில் முடிவதே நல்லது.
மற்றவர்கள் வேண்டுமென்றே தமிழனை சூத்திரன் என்று சொல்வதோ" நான் சொல்லலை அந்தா நம்ம எதிரி நம்மை சூத்திரன்" என்று சொல்கிறான் என்றோ குறிப்பிடும் போது ராஜ ராஜனை ஒரு அரசியல் குறியீடாக தமிழர்கள் சொல்ல விரும்புகிறார்கள். ஆம் சூத்திரன் என்று தன்னம்பிக்கை இழந்து கிடப்பதை விட இது மேலானது தான். ஆனால் இதில் ஒரு ஆபத்து இருக்கிறது. சிவாஜியை மராத்தாக்கள் ஒரு மராட்டிய ஆளுமையாகக் கொண்டதை அப்படியே இந்து வீரன் முசுலீம்களுக்கு எதிராக போரிட்டவன் என்று திரித்தனர் இந்துத்துவ சக்திகள். சிவாஜி படையில் இஸ்லாமியத் தளபதிகள் கூட இருந்தனர் என்பது தான் உண்மை. இந்து ராஜராஜன் என்றால் அடுத்து எதிரி யார். தருண் விஜய்க்கு தமிழ் பிடிப்பது பிடிக்காதது அவருடைய சொந்த விஷயம். இவங்களும் மொழி அரசியல் பண்றாங்களாம். தம்பி வீட்ல பெரியவங்க இருந்தா வரச் சொல்லு என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தான். அதீத நம்பிக்கை மூட நம்பிக்கை கொண்டு இவர்கள் வருவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

No comments:

Post a Comment