Friday, December 5, 2014

பிரபாகரனுக்கு வீர வணக்கங்கள் - நவம்பர் 26 - அகவை 60

"தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அரசியல்க் கோழைகள் " என்று வட இந்தியாவின் பொதுப் புத்திக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அரசியலில் தொடர்ந்து போராடிய இனம் நமது. விடுதலைப் போராட்டத்தில் ஐ என் எ வில் தமிழர்களே மிகுதியாக இருந்தனர். வேலூரை பற்றி தெரியாமல் மங்கள் பாண்டே என்பார்கள். இருட்டடிப்பில் நாம் காணாமல் போனோம் என்றார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுமே இல்லையென்றார்கள். நாம் எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. தேசியக் கட்சிகள் தங்களுக்குள்ளே வேட்டியை மட்டும் கிழித்துக் கொள்ளலாம் என்று தமிழர்கள் சனநாயக உரிமை கொடுத்தனர்.
என்னிடம் முரட்டுத் தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்ட ஆசிரியர் ஒருவர் "தமிழர்கள் அறிவாளிகள், ஆனால் பயந்தாங் கோழிகள்" என்றார். "புலிகள் தலைவனைப் பற்றி தெரியுமா? நான் புலியாக இருந்தால் என்ன செய்வீர்கள்"? என்று கேட்டேன். வெடவெடத்துப் போனார். ஒரு இனத்தின் விடுதலைக்காக அரசியல் உணர்ச்சியோடு முக நூலில் போட்டோஷாப் பண்ணியவர்கள் அல்ல நாங்கள். இனத்தின் லட்சியத்திற்கு உயிர் கொடுக்கவும் துணிந்தவர்கள். அரசியல்க் கோழைகள் தான் காந்தியைத் தவறான இடங்களில் உதாரணம் காட்டுவார்கள். எம்மினத்திற்கு மானம் ஊட்ட தொடர்ந்து பிரபாகரன்களும் பெரியார்களும் பிறப்பார்கள். நாங்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களும் அல்ல கோழைகளும் அல்ல. பிறந்து கொண்டே இருக்கும் பிரபாகரன்களுக்கு வாழ்த்துகள்.


No comments:

Post a Comment