Friday, December 5, 2014

இயற்கை முறை விவசாயம் - சீரகச் சம்பா - விரைவில் விற்பனைக்கு


  • முல்லைப் பெரியாறு தண்ணீரின் பெரும்பயன் கம்பம் சின்னமனூருக்குப் பின் எங்கள் பகுதிக்குத் தான். 
  • இப்போது கிடைத்துள்ள தீர்ப்பால் பெரும் நிம்மதி என்றே சொல்ல வேண்டும். முன்பு நடவு முடிவதற்குள் முறை வைத்து நீர் விடுவார்கள். 
  • கடைமடை பகுதி நடவே முடியாது. பெரும்பகுதி நிலம் வீணாகக் காரணம் கண்மாய்களில் நீர் சேர்க்க முடியாமல் போவது தான். 
  • கார்த்திகை மழை பெரிதாக இல்லாத போதும் நீருக்கான உத்திரவாதம் உள்ளது.
  • இன்னும் நூறு நாட்களுக்குத் தேவையான நீர் உள்ளது.
  • இடையிடையே மழை பெய்தால் போதும்.
    மழை கூடினா
    ல் வைகைப் பகுதியும் வளம் பெறும். 
  • இன்று நடவை முடிக்கும் போது நிறைவாக இருக்கும். 
  • காலையில் இயற்கை உரங்களை தொளி அழுகளில் இட்டுவிட்டு வந்தேன். 
  • புல்லும் செடியும் உழவில் மக்கி அழுகிக் கொண்டிருக்கிறது. 
  • வரப்புகள் வெட்டி பரம்படித்து நிலம் சீர் செய்து மேடு பள்ளங்கள் திருத்துதல் முடிந்தது. இப்போது நடவு செய்யும் பெண்கள் வருகைக்கு காத்திருக்கிறேன். 
  • சீரகச் சம்பா தான் இயற்கை முறையில் நடுகிறேன். 
  • பிரியாணி மற்றும் பொங்கல் போன்றவற்றிற்கு ஏற்றது. 
  • விளைச்சல் நன்றாக இருப்பின் முகநூல் வழியே விற்பனை அறிவிப்பை வெளியிட உள்ளேன். 
  • வேண்டுவோர் சொல்லி வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகப்படியான நம்பிக்கை தான்.

No comments:

Post a Comment