நல்லவன் அல்லது தனித்திறனாளி
- இளங்கோ கல்லானை முகநூலில்
- யாருக்கும் பணியாமல் இறுமாப்போடு இரு என்று குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பதல்ல நோக்கம்.... உன் தேவையாய் இருந்தாலும் கெஞ்சிப்பழகாதே என்று சொல்லிக்கொடுப்பதுதான் நோக்கம்...!!!
- தகப்பனே ஆனாலும் இரு கை எடுத்து இறைஞ்சக் கூடாது. இந்த குற்ற உணர்ச்சியையும் குறுகலையும் ஒரு போதும் கொள்ளாதே
- அவன் மேலும் மேலும் கீழ்ப்படிகிறானே நல்லவனாக இருக்க வேண்டும் என்று தன்னை இழக்கிறானே
- இரு கைகளையும் பரப்பி படுத்தபடி வானத்தைப் பார்க்கும் குழந்தையைக் காணோமே
- பள்ளிக்குக் கொடுக்கும் போது பலி கொடுக்கிறோமே என்று அயர்ச்சியாக இருக்கிறது. சமூக ஒப்பந்தங்கள் அப்படி என்று சோர்கிறேன்
- குழந்தைகள் சுயமாகத் தேடுவதையே விரும்புகிறார்கள்.
- பழங்குடிகள் இஷ்டமான குழந்தைகளாகவே வளர்ந்து ஓவியம் மண்பானைகள் சட்டிகள் என்று செய்து வாழ்ந்திருப்பார்கள். கீறல்களை பூச்சுகளை குடைதல்களை குழந்தைகளின் கைவண்ணத்தொடு கற்பனை சிதையாமல் செய்திருப்பார்கள்.
- இளங்கோ கல்லானை முகநூலில்
No comments:
Post a Comment